ஹமூன் புயல் எதிரொளி.. கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

 
hamun storm
ஹமூன் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது ஒடிசா மாநிலம் பேரதிப் துறைமுகத்தில் இருந்து சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.இந்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியது.

चक्रवाती तूफान हमून छत्तीसगढ़ में बेअसर !

இந்த புயலுக்கு ஹமுன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தற்போது ஒடிசா மாநிலம் பேரதிப் துறைமுகத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று  வங்காளதேசம் நாட்டில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No. 2 storm warning cage hoisted at Cuddalore port | கடலூர் துறைமுகத்தில் 2-ம்  எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்  கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு என்பது புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.

From around the web