'உங்கள் பெயருக்காகவே கோரிக்கை நிறைவேற்றப்படும்' - ஆதவ் அர்ஜுனா கலகல பேச்சு!

 
ஆதவ் அர்ஜுனா

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ.-வின் கோரிக்கைக்குப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலகலப்பான முறையில் பதிலளித்தது அவை உறுப்பினர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, வந்தவாசி தொகுதி திமுக எம்.எல்.ஏ. அம்பேத்குமார் தனது தொகுதியில் நிலவிவரும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தப் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

ஆதவ் அர்ஜுனா

இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்து உரையாற்றிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "எம்.எல்.ஏ.-வின் இந்தக் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும். குறிப்பாக, நீங்கள் 'அம்பேத்கர்' எனப் பெயர் வைத்துள்ளதற்காகவே உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்" என்று கூறினார்.

அமைச்சரின் இந்த எதிர்பாராத கலகலப்பான பேச்சைக் கேட்டு அவையிலிருந்த சக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமடைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.