விரைவில் முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்... ட்ரம்ப் உறுதி!

 
ரஷ்யா உக்ரைன்

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக  இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அமெரிக்க அதிபராக  டிரம்ப்  போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்து இருந்தார்.  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி மூலம் உரையாடி, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதிப் பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார்.  

உக்ரைன்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன்  பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இருப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரம்ப் ” புதினுடன் தொலைபேசியில் பேசினேன். ஆக்கபூர்வமான உரையாடலாக இருந்தது. உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலர் சக்தி உள்பட பல்வேறு விஷயங்களை பேசினோம்.உக்ரைன் போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதையும் நிறுத்த வேண்டும் என்பதை  எடுத்துரைத்திருக்கிறேன்.

உக்ரைன்


உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும், ஜெலென்ஸ்கியுடன் தொடர்பு கொண்டு, இந்த முயற்சியை முன்னெடுக்கவும்  இருவரும் ஒப்புக்கொண்டுள்ளோம்” எனவும் தெரிவித்துள்ளார். இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு பிறகு  ரஷ்யா-உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உலக நாடுகளில் இதன் மூலம் உருவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!