ரஷ்ய போரில் இந்திய வீரர்கள் 12 பேர் பலியானதாக மத்திய அரசு தகவல்!

 
இந்திய போர்

ரஷ்ய போரில் இந்திய வீரர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் சுமார் 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்கிடையில், இந்த போரில் உக்ரைன் எல்லைகளில் போராடும் ரஷ்ய வீரர்களுக்கு உதவ சில இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைத்து இந்தியர்களையும் விரைவில் ரஷ்ய ராணுவத்திலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. 

ரஷ்யா

இதற்கிடையில், சமீபத்தில் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ரஷ்ய ராணுவத்துடன் சண்டையிட்ட 12 இந்தியர்கள் இறந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது; - "இன்றைய நிலவரப்படி, 126 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் 96 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். ரஷ்ய ராணுவத்தில் இன்னும் 18 இந்தியர்கள் உள்ளனர், அவர்களில் 16 பேர் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்காக போராடி சுமார் 12 இந்தியர்கள் இறந்துள்ளனர்." இவ்வாறு அவர் கூறினார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web