"திமுக ஆட்சியிலும் அதே ‘இந்தி’ பேட்ஜ் தான் பயன்படுத்தப்பட்டது" - தவெக ஐடி விங் கண்டனம்!

 
காவலர் விருது

காவல்துறை கொடி நாளில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ள பேட்ஜ் (Badge) பயன்படுத்தப்பட்டது குறித்துத் திமுக மற்றும் தவெக ஐடி விங் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை கொடி நாளின்போது காவலர்களின் சீருடையில் அணியப்படும் பேட்ஜ்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றிருப்பது குறித்துச் சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இதைக் குறிப்பிட்டுள்ள தவெக ஐடி விங், காவலர்கள் சீருடையில் இந்திப் பேட்ஜை அணிய வேண்டும் என்று ஒன்றிய அரசு பல ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்த போதிலும், திராவிட மாடல் அரசு அதனை ஒருபோதும் ஏற்கவில்லை என்று இன்று அறிக்கை வெளியிட்ட தீயசக்தியைச் சாடியுள்ளது. திமுக ஆட்சியிலும் இதே பேட்ஜ் தான் பயன்பாட்டில் இருந்தது என்பது கூடத் தெரியாமல் இதுபோன்ற அறிக்கைகள் வெளியிடப்படுவதாகத் தவெக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.