3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவோருக்குக் கட்டாய மாறுதல் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

 
பள்ளிக்கல்வித்துறை

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஒரே அலுவலகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் அலுவலகப் பணியாளர்களுக்குக் கட்டாய மாறுதல் வழங்கப்பட உள்ளதாகத் துறையின் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப  உத்தரவு!! தமிழக அரசு அதிரடி!!

ஒரே பதவியில் அல்லது ஒரே பணியிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றும் அனைத்து அலுவலகப் பணியாளர்களுக்கும் கட்டாய மாறுதல் வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல் மற்றும் பதவி உயர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.

அலுவலகப் பணியாளர்களின் (முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முதல் காவலாளி வரை) முழுமையான விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

பள்ளிக்கல்வித்துறை தேர்வு

வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையிலும், EMIS தளத்தில் பல பதிவுகள் விடுபட்டுள்ளதும், சில இடங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை விடக் கூடுதலாகப் பதிவுகள் உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.