மீண்டும் தொடங்குகிறது ‘இந்தியன் 3’ - படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரம்!
Oct 8, 2026, 16:00 IST
கமலின் நடிப்பில் உருவான ‘இந்தியன் 2’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், இப்படத்தின் தொடர்ச்சியான ‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் தற்போது மீண்டும் முழுவீச்சில் தொடங்கியுள்ளன.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் புதிய போஸ்டரை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் ‘War Mode’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இந்தியன் 3’ கைவிடப்படலாம் எனத் திரைப்பட வட்டாரங்களில் வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
