பெரும் சோகம்... உயிரிழந்த தாயின் உடலை 15 கிமீ சைக்கிளில் கட்டி எடுத்துச் சென்ற மகன்!

மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில் மீண்டும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றுமுன்தினம் காலை உணவு அருந்தியபிறகு அவரை காணவில்லை. மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் வாகன சோதனை மேற்கொண்டார்.
அந்த நேரத்தில் மூன்றடைப்பு பகுதியில் உள்ள பாலத்தில் பாலன், தனது தாயை சைக்கிளில் பின்னால் உட்கார வைத்து கயிற்றால் கட்டி தனது ஊருக்கு அழைத்துக் கொண்டு சென்றது தெரியவந்தது. போலீஸார் அவரை தடுத்து பார்த்தபோது, சிவகாமியம்மாள் உயிரிழந்த நிலையில் இருந்தார். ஆனால் தாயார் இறந்தது கூட பாலனுக்கு தெரியவில்லை.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உணவு கொடுத்தபோது அவர் சாப்பிடவில்லை என்பதால் வீட்டுக்கு அழைத்துவந்து விட்டதாக பாலன் போலீஸில் கூறினார். சிவகாமியம்மாள் உடலை போலீஸார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!