கொடூரம்... நோன்பு கஞ்சியில் விஷம் வைத்து தாயை கொலை செய்த மகன் !

 
நோன்பு கஞ்சி


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அருகே கரிம்புழாவில் வசித்து வருபவர்  மம்முவின் மனைவி 71 வயது நபீஷா.   இவரது மகன் 42 வயது பஷீர்.  மருமகள் 36 வயது பசீலா . 2016ம் ஆண்டு வீட்டில் இருந்த தங்க நகைகளை காணவில்லை. சந்தேகத்தின் பேரில் பஷீர், பசீலா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஆம்புலன்ஸ்

இதனையடுத்து தம்பதியர் மன்னார்க்காட்டில் வாடகை வீட்டில் வசித்தனர். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தில் இருந்த தம்பதியர் 2016 ஜூன் 23ம் தேதி நோன்பு காலத்தில் நபீஷாவை கொலை செய்யும் நோக்கில் வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று கஞ்சியில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.  இதில் நபீஷா உயிரிழந்ததை அடுத்து  அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி  தோட்டத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

உத்தரபிரதேச போலீஸ்


சடலத்தைக் கைப்பற்றி மன்னார்க்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்ததில்  பஷீர், பசீலா நபீஷாவை கொலை செய்தது தெரிய வந்தது. இதில் மகன் பஷீருக்கும், மருமகள் பசீலாவிற்கும் ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோமோன் ஜோன் தீர்ப்பு கூறியுள்ளார்.   

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க

From around the web