தக்காளிப் போரில் நனைந்த புனோல் நகரம் - கோலாகலமாகத் தொடங்கிய ஸ்பெயின் திருவிழா!

 
தக்காளி தக்காளித் திருவிழா ஸ்பெயின்

 

 

ஸ்பெயின் நாட்டில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாத கடைசி புதன்கிழமை அன்று நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற 'டொமாட்டினா' எனப்படும் தக்காளிப் போர் திருவிழா இந்த ஆண்டும் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது.

உலகளவில் மிகவும் விசித்திரமான மற்றும் பிரபலமான இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயினின் புனோல் நகரில் குவிந்தனர்.

விழா தொடங்கியதும், பிரத்யேக லாரிகளில் கொண்டு வரப்பட்ட டன் கணக்கிலான தக்காளிக்கூழ் குவியலில் மக்கள் குதித்து ஆரவாரம் செய்தனர். ஒருவருக்கொருவர் தக்காளிகளை வாரி இறைத்து விளையாடியதால், அந்த நகர வீதிகள் முழுவதும் தக்காளிச் சாறு தேங்கி சிவப்பு நிற வெள்ளம் ஓடுவது போலக் காட்சி அளித்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த உற்சாகத் தக்காளிப் போரைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.