தளபதி 68-ல் குவிந்த நட்சத்திர பட்டாளம்.. கோலகலமாக நடைப்பெற்ற படப்பிடிப்பு துவக்க விழா..!

 
தளபதி 68
தளபதி 68 படப்பிடிப்புக்கான பூஜை முன்னோட்ட வீடியோவை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

லியோ திரைப்படத்தையடுத்து விஜயின் 68 ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். 


இந்தத்திரைப்படத்தை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப்படத்தில் விஜயுடன் நடிகர் பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், ஜெயராம், விடிவி கணேஷ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர். மேலும், நடிகைகள் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா உள்ளிட்டோரும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்ற படக்குழு அங்கு 3டி விஎஃப்எக்ஸ் ஸ்கேன் தொழில்நுட்பத்தில் விஜயை லுக் டெஸ்ட் எடுத்தனர். டீ -ஏஜிங், அதாவது நடிகர்களின் வயதை குறைத்துக்காட்டும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் இந்தப்படத்தில் நடிகர் விஜய் அப்பா - மகன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 

வந்தாச்சு ‛விஜய் 68' பட பூஜை : வெங்கட்பிரபு கேங்குடன் களமிறங்கும் ‛மல்டி  ஸ்டார்ஸ்' | Dinamalar

முன்னதாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த லியோ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை ஈட்டி இருக்கும் இந்தத்திரைப்படம் இந்தியாவில் 200 கோடியை தாண்டியும்,  உலகளவில் 400 கோடியையும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. 

From around the web