பகீர் ஆய்வறிக்கை.. புகைப்பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய்.. வருடத்திற்கு 13 லட்சம் பேர் உயிரிழப்பு..!!

புகைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் ஆண்டுதோறும் இந்தியா, சீனா, பிரிட்டன், பிரேசில், ரஷியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 7 நாடுகளில் 13 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் ஏற்படும் புற்றுநோய் உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்த 7 நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். 'லான்செட்' மருத்துவ ஆய்விதழ் இதுதொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சிகரெட், மதுபானம், உடல் பருமன், பால்வழி நோய்த் தொற்று (ஹெச்பிவி) ஆகியவற்றால் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் புகைப் பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோயால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உலகம் முழுவதும் 2 நிமிஷங்களுக்கு ஒருவர் உயிரிழந்து வருகின்றனர். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் இது 90 சதவீதம் உள்ளது.
இந்தியாவில் ஆண்களில் பெரும்பலானவர்களுக்கு தலை, கழுத்துப் பகுதி புற்றுநோயாலும் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயாலும் உயிரிழக்கின்றனர்.
மற்ற நாடுகளில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனைகள் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் குறைவாக உள்ளன.
புகைப்பழக்கம், மதுபானம் அருந்துவதாதல் உயிரிழப்பில் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சீனா, இந்தியா, ரஷியாவில் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை பெண்களைவிட 9 மடங்கு அதிகமாக உள்ளது. உடல் பருமன், பாலியல் வழி நோய்த் தொற்று புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.