அதிர்ச்சி.. தாலி மஞ்சள் வாசம் போகலை... திருமணமான 15வது நாளில் புதுப்பெண் மர்ம மரணம்!

 
இந்துஜா

திருமணம் முடிந்து தாலியின் மஞ்சள் வாசம் கூட போகாத நிலையில், 20 நாட்களிலேயே மணப்பெண் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விநாயகபுரம் வேல்முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அனந்தராமன், ஆனந்தி தம்பதி. இவர்களது மகள் இந்துஜா (27). மகன் மோனிஷ்வர். இந்துஜா ஐடி துறையில் பணியாற்றி வந்தார். தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் வீட்டில் இருந்தே வேலை செய்து வந்தார்.

பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருக்கல்லூரி மாணவர்களிடையே மோதல் | tamil news  2 college students conflict in perambur railway station

இந்துஜா பெரம்பூர் எஸ்பிஐ காலனி 2வது தெருவை சேர்ந்த ஹரிகரனை (30) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து கடந்த ஜனவரி 21ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். நேற்று மதியம் 1.30 மணியளவில் இந்துஜா தனது கணவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். ஹரிகரன் இந்துஜாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இந்துஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹரிகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்துஜாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இந்துஜாவின் உடலை பரிசோதனை செய்து காயம் ஏதும் இல்லாததால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருந்து விற்பனை மையத்தில் இன்சுலின்  இல்லாததால் சர்க்கரை நோயாளிகள் அவதி | Diabetics patients suffer from lack of  insulin in kilpauk ...

மேலும் திருமணமாகி 15 நாட்களே ஆனதால், கோட்டாட்சியரால் வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்துஜாவின் தாய் ஆனந்தி ஓட்டேரி காவல்நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் எப்படி இறந்தார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். திருமணமான 20 நாட்களில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web