மாணவி கொலையில் திடீர் திருப்பம்... காதலித்து, திருமணத்திற்கு மறுத்ததால் காதலன் வெறிச்செயல்!

 
நர்கிஸ்

கல்லூரி மாணவி ஒருவர் பூங்காவின் இருக்கை அருகே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் இருந்த சம்பவம் மொத்த தலைநகரையும் உலுக்கி எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  டெல்லியில் கொலைச் செய்யப்பட்ட 2வது பெண். இரண்டு கொலைகளிலும், கொலைச்செய்யப்பட்ட பெண்களுக்கு கொலையாளி நெருக்கமாக, நன்கு அறிமுகமானவராகவே இருந்துள்ளார்.

தலையில் அடிப்பட்ட காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவியின் உடலருகே இரும்பு தடி ஒன்று ரத்தக்கறையுடன் கிடந்துள்ளது. போலீசாரின் விசாரணையில், தனது தோழியுடன் பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இளம்பெண் நர்கிஸ் என தெரிய வந்தது. காதலித்து விட்டு, திருமணத்திற்கு நர்கிஸ் மறுத்ததால் உறவினரும், காதலருமான இர்பான் கொலைச் செய்து விட்டார்.

நர்கீஸ்

கமலா நேரு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த நர்கிஸ், மாளவியா நகரில் ஸ்டெனோகிராஃபர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். நர்கிஸ்சும், அவரது உறவினரான இர்பானும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில்   நர்கிஸின் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இர்பானை விட்டு நர்கிஸ் பிரிந்து விட்டார். குடும்பத்தினர் எதிர்ப்பை சமாளிக்க முடியாது எனக் கூறி இர்பானை திருமணம் செய்து கொள்ளவும், இர்பானுடன் தொடர்ந்து பேசவும் நர்கிஸ் மறுத்து விட்டார்.  பூங்காவில் இது குறித்து பேசலாம் என அழைத்து நர்கிஸை இரும்பு தடியால் அடித்து இர்பான், கொலைச் செய்தது  விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

போலீஸ்

இதன் பேரில் இர்பான் கைது செய்யப்பட்டுள்ளார். இர்பான் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார்.  மாணவி பூங்காவில் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வருத்தம் தெரிவித்துள்ளார். அத்துடன் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தீவிர பிரச்சினையாக மாறிவருவதாகவும்   கவலை தெரிவித்துள்ளார். இச்சம்பவம்குறித்து  டெல்லி மகளிர் ஆணையத்தின்(டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால்  " டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து நாளுக்கு நாள் கேள்விக்குறியாக மாறி வருகிறது.உடனடியாக மத்திய அரசு கூட்டத்தை கூட்டி  இச்சம்பவங்களை டிசிடபிள்யூ கவனத்தில் கொண்டு, அதற்கான நோட்டீஸ்களை வெளியிட வேண்டும்” எனக் கூறியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, நர்கிஸ் வீட்டில் தான் இர்பான் தங்கியிருந்துள்ளார். உறவினரும், காதலருமான இர்பான், தன்னைத் திருமணம் செய்து கொள்ள நர்கிஸ் மறுத்ததால் கொலைச் செய்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web