"பதவி ஏற்றத்திலிருந்தே வெயில் கொளுத்துகிறது" - செல்லூர் ராஜு பேச்சு!

 
செல்லூர் ராஜு

தவெக எம்.எல்.ஏ. கருப்பையாவின் ஜல்லிக்கட்டு தொடர்பான கருத்தைக் கண்டித்து அலங்காநல்லூரில் நடைபெற்ற அதிமுக கண்டனப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தமிழக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சமீபத்தில் ஜல்லிக்கட்டு குறித்துத் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தைக் கண்டித்து, அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "என்றைக்கு GenZ தலைவர் என்று கூறி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதோ, அன்றிலிருந்தே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது; இது ஜாக்பாட்டில் அமைந்த மைனாரிட்டி ஆட்சி" என்று குற்றம் சாட்டினார்.

மேலும், புகழ்பெற்ற 'படையப்பா' திரைப்பட பாணியைக் குறிப்பிட்டு, "சட்டை எங்களது, மாப்ள அவங்க" என்பது போலத்தான் தற்போதைய அரசு செயல்பட்டு வருவதாக அவர் கிண்டலாக விமர்சித்தார்.