அறுவை சிகிச்சை வெற்றி... ஐயப்பன் கோயிலில் நடிகர் ராம் சரண் சாமி தரிசனம்!

 
ராம் சரண்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், கோவையில் தனக்கு மேற்கொள்ளப்பட்ட கை மணிக்கட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள பிரபல ஐயப்பன் கோயிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பெத்தி' படத்திற்கான சண்டைக்காட்சியில் நடித்தபோது, அவரது கை மணிக்கட்டில் எதிர்பாராதவிதமாகக் காயம் ஏற்பட்டது.

ராம் சரண்

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, கோவை சித்தார்த்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்குக் கை மணிக்கட்டுக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, நடிகர் ராம் சரண் தனது மனைவி உபாசனாவுடன் கோவை சித்தாபுதூர் பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்குச் சென்று சிறப்புச் வழிபாடு செய்தார்.

அறுவை சிகிச்சைக்குப் பின் கைப்பட்டையுடன் ராம் சரண் தனது குடும்பத்துடன் சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.