வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை... உறவினர் வெறிச்செயல்!
தமிழகத்தில் திருநெல்வேலியில் சொத்து தகராறில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நெல்லை ராமையன்பட்டி சப்பானி மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சீனிவாசன் (30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினரான சுப்பிரமணியன் மகன் இசக்கிபாண்டி (26) என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு 7 மணியளவில் சீனிவாசன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று சீனிவாசன் கை, கால்களை கழுவிக் கொண்டிருந்த போது, அங்கு அரிவாளுடன் வந்த இசக்கிபாண்டி தகராறு செய்து சீனிவாசனின் கழுத்தில் பலமாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட இசக்கிபாண்டி கையில் அரிவாளுடன் ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் இருந்து வெளியே வந்ததைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மடக்கிப்பிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்த நெல்லை ஊரக பகுதி போலீஸ் துணை சூப்பிரண்டு பொன் ரகு, மானூர் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இசக்கி பாண்டியை கைது செய்து, அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சீனிவாசன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சீனிவாசனுக்கு கலா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். அவர் சம்பவம் நடந்த போது களக்காட்டில் உள்ள தனது தாயார் வீட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லையில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!