கூடாரமே காலியாகுதோ... நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் கட்சியிலிருந்து விலகல்!

 
நாதக ஜெகதீச பாண்டியன்

நாம் தமிழர் கட்சி கூடாரமே காலியாகுதோ என்று எண்ணும் வகையில் அந்த கட்சியில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி  வருவது நாம் தமிழர் கட்சியின் தம்பிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது நாதகவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சீமான் பெரியார்

இவர் கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை எனவும்,  தன் மீது அவதூறு பரப்புகின்றனர் எனவும்  ஜெகதீச பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

சீமான்

இது குறித்து ஜெகதீச பாண்டியன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவறவிட்டுவிட்டார்.  வலதுசாரி சிந்தனையோடு இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியாது எனவும்  விமர்சித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web