மும்மொழி திட்டத்தைக் கட்டாயப்படுத்தக் கூடாது.. உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 
சிபிஎஸ்இ மாணவிகள்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 6 மற்றும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் கட்டாய மும்மொழித் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் விரும்பும் மொழித் தேர்விலேயே தொடர்ந்து கல்வி பயில அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மொழிப் பாடங்களைப் படிக்க வேண்டும் என எந்தவொரு மாணவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 6 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்வி ஆண்டில் மும்மொழித் திட்டத்தைக் கட்டாயமாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஏற்கெனவே 2 மொழிகள் அல்லது 3 மொழிகளைத் தேர்வு செய்து படித்து வரும் மாணவர்கள், அதே நடைமுறையிலேயே தொடர்ந்து கல்வி பயில அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ மாணவிகள்

எந்தவொரு மாணவரையும் இத்தனை மொழிப் பாடங்களைத்தான் படிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மொழிப் பாடத் தேர்வு தொடர்பான இந்த உத்தரவு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே நிலவி வந்த குழப்பங்களுக்குத் தெளிவு அளிப்பதாக அமைந்துள்ளது.