’அடுத்த தலைமுறைக்கான நேரம் வந்துவிட்டது'.. ஓய்வை அறிவித்தார் மொயீன் அலி!

 
மொயின் அலி

இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்த மொயீன் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 37 வயதான மொயின் , ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. பின்னர் ஓய்வு பெற முடிவு செய்தார். 

2014 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமான பிறகு, மொயின் அலி 68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடினார். அவர் இங்கிலாந்துக்காக அனைத்து வடிவங்களிலும் 6678 ரன்கள், 8 சதங்கள், 28 அரைசதம் மற்றும் 366 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கயானாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அரையிறுதியில் தோல்வியடைந்ததே அவரது கடைசி சர்வதேசப் போட்டியாகும். 2019 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2022 டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் மொயீன் இருந்தார்.

ஓய்வை குறித்து மொயின் அலி கூறுகையில் , 'எனக்கு 37 வயதாகிறது, இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. நான் இங்கிலாந்துக்காக நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். இப்போது அடுத்த தலைமுறைக்கான நேரம் வந்துவிட்டது, இது சரியான நேரம் என்று நான் உணர்ந்தேன்’ என கூறினார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!