22,000 பேர்... 1,50,000 கிலோ தக்காளி... மாஸ் காட்டிய தக்காளி திருவிழா!

 
ஸ்பெயின் தக்காளி திருவிழா

ஸ்பெயினில் நடந்த தக்காளி திருவிழாவில் திரளானோர் கலந்து கொண்டனர். 1945 முதல், ஸ்பெயினில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தக்காளி திருவிழா நடத்தப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு ஸ்பெயினின் கிழக்கே, வலென்சியா நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் உள்ள புனோல் நகரில் நேற்று இந்த பாரம்பரிய திருவிழா நடந்தது.

La Tomatona எனப்படும் இந்த தக்காளி திருவிழாவில் 22,000 பேர் வரை ஆண்கள் மற்றும் பெண்கள் வெள்ளை உடை அணிந்து கலந்து கொண்டனர். இந்த பண்டிகைக்காக 7 லாரிகளில் 150 டன் தக்காளி கொண்டு வரப்பட்டு, தக்காளியை ஒருவர் மீது ஒருவர் வீசி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளம் பெண்களும், இளைஞர்களும் தக்காளி சாற்றில் ஆனந்தமாக குளித்தனர். அவருக்கு வழக்கமான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.

இந்த பாரம்பரிய திருவிழாவில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, கென்யா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பிற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் திருவிழாவில் பங்கேற்க குவிந்தனர். வெளிநாட்டினருக்கு ஒரு நபருக்கு ரூ.1,400 ($16.70) வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு கட்டணம் இல்லை. வாணவேடிக்கையுடன் திருவிழா தொடங்கியது. இவ்விழாவில், ஒருவர் மீது ஒருவர் தக்காளியை வீசி மகிழ்கின்றனர். இதற்குப் பிறகு, தெருக்களில் குவிந்திருந்த தக்காளிக் கழிவுகளை அதற்கென பணியமர்த்தப்பட்ட குழுவினர் சுத்தம் செய்தனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா