தொடரும் சோகம்... யானை தாக்கி 2 பேர் உடல் நசுங்கி பலி!

 
 தொடரும் சோகம்...  யானை தாக்கி 2 பேர் உடல் நசுங்கி பலி!

கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்ந்துள்ளது  அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சி அருகே வனத்தில், தேன் சேகரிக்க சென்ற இருவர் சென்றிருந்தனர். இவர்கள் இருவரும்  காட்டு யானையிடம் சிக்கி கொண்டதில் யானை  தாக்கி இருவரும் பரிதாபமாக  உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்கள் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த சதீஷ் மற்றும் அம்பிகா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்கள் அதிரப்பள்ளியில் தற்காலிக குடிசைகளில் வசித்து வந்தனர். ஒரு நாள் முன்புதான், அதிரப்பள்ளியில் யானை தாக்கியதில் செபாஸ்டியன் (20) என்ற பழங்குடி இளைஞர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

அதே பகுதியில் காட்டு யானை தாக்கி இன்று ஏப்ரல் 15ம் தேதி மேலும் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web