தாய் உயிரிழந்த சோகம்... மகன் தூக்கிட்டு தற்கொலை!

 
முத்தம்மாள் (80)
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் தாய் இறந்த துக்கம் தாளாமல் அதே நாளில் மகனும் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்- சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் மகன் ரத்தினராஜ் (35), இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் ரத்தினராஜின் தாய் முத்தம்மாள் (80) வயோதிகம் காரணமாக உயிரிழந்துள்ளார்,‌ 

இந்நிலையில் இறந்த தாயின் அருகே ரத்தினராஜ் நாள் முழுவதும் சோகமாக அமர்திருந்ததாகவும், மிகவும் மனவருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை  ரத்தினராஜ் தாயை இழந்த துக்கத்தால் வீட்டின் ஆட்டு தொழுவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், ரத்தினராஜின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தாய் இறந்த துக்கம் தாளாமல் அதேநாளில் மகனும் உயிரிழந்த சம்பவம் விளாத்திகுளம் பகுதியிலும், உறவினர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!