அதிர்ச்சி... சீறிப் பாய்ந்த சொகுசு கார்... சம்பவ இடத்திலேயே 4 இளைஞர்கள் துடிதுடித்து மரணம்!
சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது சீறிப் பாய்ந்த படி தறிகெட்டு படுபயங்கர வேகத்தில் வந்துக் கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று நாமக்கல் குப்பாண்டபாளையத்தில் மோதியதில், பனை மரத்தில் சொருகி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 இளைஞர்களும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், சீராம்பாளையத்தில் திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு தாணிப்பாளையத்தை சேர்ந்த இளைஞர்கள் லோகேஷ், தனசேகர், கவின், சிவா, ஸ்ரீதர் ஆகியோர் சொகுசு காரில் சீராம்பாளையத்திற்கு சென்றுள்ளனர்.
தனசேகர் காரை ஓட்டிச் சென்றபோது, அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையைக் கடந்து மரத்தில் மோதியது. லோகேஷ், தனசேகர், கவின், சிவா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஸ்ரீதர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனையடுத்து அந்த வழியாக சென்ற நபர்கள் விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்த 4 வாலிபர்களின் உடல்களையும் போலீசார் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!