நண்பன் உயிரிழந்த சோகம்... செய்தி கேட்ட அடுத்த கணமே உயிர் துறந்த இளைஞர்!

 
நன்பர்

சென்னையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நெருங்கிய நண்பரின் மறைவுச் செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில், சக மீனவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிராகப் பழகிய நண்பனின் பிரிவைத் தாங்க முடியாமல் அடுத்த சில நிமிடங்களிலேயே மற்றொரு நண்பரின் உயிரும் பிரிந்த சம்பவம் காண்போரைக் கலங்க வைத்துள்ளது.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர் பிரகாஷ் (46). இவர் கடந்த சில நாட்களாகக் கடும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரகாஷின் உடல்நிலை மோசமடைந்து, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷின் நெருங்கிய நண்பரான ஏகாம்பரம் (45) என்ற மீனவர், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு வழக்கம்போல் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

பள்ளி மானவி தற்கொலை

கரைக்கு வந்து சேர்ந்த ஏகாம்பரத்திடம், அவரது உயிர் நண்பன் பிரகாஷ் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது. உயிர் நண்பன் இனி இல்லை என்ற கொடூரமான செய்தியைக் கேட்டதும், கடும் அதிர்ச்சியடைந்த ஏகாம்பரம் நிலைகுலைந்து கீழே விழுந்தார். நண்பனைப் பிரிந்த துயரம் தாங்காமல் அவரது உயிரும் சம்பவ இடத்திலேயே பிரிந்தது. ஆண்டுகணக்காக இணைந்து கடலுக்குச் சென்று ஒன்றாகப் பழகிய இரு நண்பர்களும் அடுத்தடுத்த நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம், காசிமேடு பகுதியில் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.