அதிர்ச்சி... நோன்பு கஞ்சி குடித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பல்செட்டோடு விழுங்கிய பரிதாபம்!

 
ரஷியா பேகம்

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரஷியா பேகம் என்ற 93 வயது மூதாட்டி கடந்த புதன்கிழமை மாலை ரம்ஜான் நோன்பை முடித்துவிட்டு நோன்பு கஞ்சி குடித்தார். அப்போது அவர் அணிந்திருந்த பலசெட் நோன்பு கஞ்சியுடன் உணவுக்குழாய்க்குள் சென்றுள்ளது.  கொக்கி போன்ற வடிவில் இருந்த பல்செட் உணவுக்குழாயில் சிக்கியதால் வேதனை அடைந்த அம்மூதாட்டியை அவரது மகள் ஷாகீர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால், மூதாட்டிக்கு மூச்சுத் திணறல் மற்றும் எச்சில் முழங்க முடியாமல் தவித்தார். உடனே அவரது குடும்பத்தினர் அவரை நள்ளிரவில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.  ஏற்கனவே ரத்த அணுக்கள் குறைதல், ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களால் அவதிப்பட்டு வந்த அவரை உள்நோயாளியாக அனுமதித்த மருத்துவக் குழுவினர், பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதையடுத்து, மூதாட்டியின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த பல் செட்டை உள்நோக்கிய கருவி மூலம் டாக்டர்கள் கவனமாக அகற்றினர். சுமார் 4 மணி நேர டாக்டர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு மூதாட்டி குணமடைந்து வருகிறார். தொடர்ந்து, மூதாட்டியின் குடும்பத்தினர் மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web