பர்த் டே பார்ட்டிக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. தண்ணீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு!

 
 கோகுல பிரியா

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வீரன்-செண்பகவல்லி தம்பதி. கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியில் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் கோகுல பிரியா நேற்று அதே பகுதியில் வசிக்கும் வான்மதி என்பவரது வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவுக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் வான்மதி வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.

அப்போது வான்மதி, தான் ஏற்கனவே கோகுல பிரியா வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறினார். பின்னர் வான்மதி வீட்டின் தண்ணீர் தொட்டியின் அருகே தண்ணீர் கொட்டுவதை பார்த்த கோகுல பிரியாவின் பெற்றோர் சந்தேகம் அடைந்து தண்ணீர் தொட்டியை திறக்குமாறு கூறினர். முதலில் தண்ணீர் தொட்டியை திறக்க மறுத்த வான்மதி  நீண்ட போராட்டத்திற்கு பிறகு தண்ணீர் தொட்டியை திறந்துள்ளார். அந்த தொட்டியில் கோகுல பிரியா சடலமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோகுல பிரியா பெற்றோர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர்.  பின்னர் பிணமாக கிடந்த கோகுல பிரியாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பேரில், தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக செண்பகவள்ளி அளித்த புகாரின் பேரில் பேரூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web