ரசிகர்கள் அதிர்ச்சி... தேசிய கால்பந்து வீரர் கார் விபத்தில் பலி!!
Updated: Oct 5, 2023, 17:34 IST

அதிவேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் தேசிய கால்பந்து வீரர் பரிதாபமாக உயிரிந்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர் சர்தாஜ் சிங். இவர் தேசிய அளவிலான கால்பந்து வீரர். இவர் தனது சகோதரருக்காக சந்தையில் ரொட்டி கொடுக்க வந்துள்ளார். இந்த நிலையில், இன்று சந்தைக்கு டூவீலரில் சர்தாஜ் சிங் ரொட்டி கொண்டு சென்றுள்ளார். அப்போது கல்சாயா பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார், சர்தாஜ் சிங் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சர்தாஜ் சிங் சம்பவ இடத்திலேயே சர்தாஜ் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சர்தாஜ் சிங் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கார் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கார் மோதி கால்பந்து வீரர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
From around the
web