ரயிலை விட்டு தனியாக கழன்று ஓடிய இன்ஜின் .. பதற்றத்தின் உச்சியில் பயணிகள்..!

 
ரயிலில் இருந்து பிரிந்த இன்ஜின்
மஹாராஷ்டிர மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயில் இன்ஜின் தனியே கழன்று சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை போரிவிலியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் புறப்பட்டடுள்ளது. இந்த ரயில் பிற்பகல் 2.15 மணி அளவில் விராரை அடுத்த ரெயில் நிலையமான வைத்தர்ணா அருகே வந்த போது திடீரென ரயில் இன்ஜின் தனியாக கழன்று ஓடியுள்ளது. என்ஜினுக்கும், ரெயில் பெட்டிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இந்த விபரீதம் நடந்தது. இந்த சம்பவம் நடந்தபோது பெரிய அளவில் சத்தம் கேட்டுள்ளது. பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டனர். சிறிது தூரம் ஓடிய என்ஜினரை டிரைவர் நிறுத்தினார். ரெயில் பெட்டிகளும் சிறிது தூரம் ஓடியபடி நின்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Engine of Mumbai Ahmedabad passenger train got separated from coaches in  Vaitarana; मुंबई-अहमदाबाद पॅसेंजर रेल्वे गाडीचे इंजिन डब्यांपासून वेगळे |  Maharashtra Times

ரயில் வண்டி மெதுவாக சென்று கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததால் பெரும் விபத்து ஏற்படாமல் சிறிய பதற்றத்துடன் முடிந்தது. பின்னர் தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரெயில் பெட்டியுடன் இன்ஜினுடன் இணைத்தனர். இதன்பின்னர் தாமதமாக அங்கிருந்து ரெயில் புறப்பட்டு அகமதாபாத் நோக்கி சென்றது.ரயில் பெட்டியை விட்டு இன்ஜின் தனியே கழன்று சென்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

From around the web