‘பிக்பூட்’ குறித்த ரகசிய அரசு ஆவணங்களை வெளியிட்டது டிரம்ப் நிர்வாகம்!

 
பிக்பூட் டிரம்ப்

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம், மர்ம உயிரினமாகப் பல தசாப்தங்களாகப் பேசப்பட்டு வரும் ‘பிக்பூட்’ தொடர்பான அரசு ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் 1982-ஆம் ஆண்டு வாஷிங்டன் காட்டுப் பகுதியில் கண்டறியப்பட்ட 15 அங்குலப் பிரம்மாண்டமான கால்தடங்கள் குறித்த ஆய்வும், மொன்டானா மாகாணத்தில் வேட்டைக்காரர் ஒருவர் எதிர்கொண்ட விசித்திர அனுபவங்கள் குறித்த பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

வெளியிடப்பட்ட ஆவணங்களில் 1982-ஆம் ஆண்டு வாஷிங்டன் மாநிலத்தின் காட்டுப் பகுதியில் பதிவாகியிருந்த சுமார் 15 அங்குல நீளமுள்ள பிரம்மாண்டமான கால்தடங்கள் பற்றிய ஆய்வு அறிக்கை முக்கிய இடம் பெற்றுள்ளது. அந்த கால்தடங்களில் காணப்பட்ட நுணுக்கமான அமைப்புகளையும், தடயங்களையும் செயற்கையாகவோ அல்லது சாதாரணமாகவோ மீண்டும் உருவாக்குவது மிகவும் கடினம் என உயிரியலாளர் ஒருவர் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இது அந்தத் தடயங்களின் இயல்பு குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ட்ரம்ப் டிரம்ப்

மொன்டானா பகுதியில் வேட்டையில் ஈடுபட்டிருந்த வேட்டைக்காரர் ஒருவர் உணர்ந்த விசித்திரமான நிகழ்வுகளும் இந்த ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் திடீரெனக் கடுமையான துர்நாற்றம் வீசியதாகவும், விசித்திரமான முனகல் சத்தம் கேட்டதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயற்கைக்கு மாறான அல்லது விளக்கப்படாத வனப்பகுதி சம்பவங்கள் தொடர்பாக முன்னர் சேகரிக்கப்பட்டிருந்த இந்தப் பதிவுகள், தற்போது அரசு ஆவணங்களாக வெளியிடப்பட்டிருப்பது ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

ட்ரம்ப் டிரம்ப்

‘பிக்பூட்’ எனப்படும் மர்ம உயிரினம் குறித்த கதைகள் மற்றும் நேரில் பார்த்ததாகக் கூறப்படும் தகவல்கள் அமெரிக்காவின் வனப்பகுதிகளில் நீண்ட காலமாக உலா வருகின்றன. இந்நிலையில், அரசு ஆவணங்கள் வெளியிடப்பட்டிருப்பது குறித்த முழுமையான விவரங்களையும், அவற்றில் இடம்பெற்றுள்ள இதர அறிக்கைகளையும் ஆராய்வதில் பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.