NDA கூட்டணியில் நீடிக்கும் இழுப்பறி... பாஜகவுக்கு 27 இடங்களா?! - தொகுதிப் பங்கீடு நிலவரம்!

 
எடப்பாடி  மோடி எடப்பாடி  மோடி

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக மற்றும் தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜகவிற்கு 27 இடங்கள் ஒதுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை வடக்கு, ஓசூர், ஊட்டி, நாகர்கோவில், மதுரை தெற்கு, வேளச்சேரி, தி.நகர், அவிநாசி உள்ளிட்ட தொகுதிகள் பாஜகவின் 'விஷ் லிஸ்ட்' பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பாஜக தரப்பில் 30 முதல் 35 இடங்கள் வரை கோரப்பட்டு வருவதாகவும், இறுதிப் பேச்சுவார்த்தைகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக நிறைவடையவில்லை என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமித்ஷா

பாமகவிற்கு 20 முதல் 23 இடங்கள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு ஏற்கனவே ஒரு ராஜ்யசபா இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுகவிற்கு 9 முதல் 13 இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமாகா மற்றும் ஜான் பாண்டியன் தலைமையிலான கட்சிகளுக்குத் தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.

அமித்ஷா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் (சுமார் 150+) போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில் கூட்டணிக் கணக்குகளை வகுத்து வருகிறார். பாஜகவுடனான பேச்சுவார்த்தையில், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைப் பிரிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வருவதாகத் தெரிகிறது.