முதல்வர் விஜய்யின் உத்தரவை மீறி செயல்பட்ட தவெக நிர்வாகி... நடவடிக்கை பாய வாய்ப்பு!
பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கட்சியினர் அத்துமீறி ஆய்வுகள் செய்யக் கூடாது என்ற கட்சியின் தலைவர் விஜயின் கண்டிப்பான உத்தரவை மீறி, தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் அரசு நூலகங்களில் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பள்ளிகள், நூலகங்கள் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களுக்குள் நுழைந்து, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அல்லது தொண்டர்கள் தேவையின்றி ஆய்வுகள் மேற்கொள்ளக் கூடாது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இதுபோன்ற நடவடிக்கைகளில் அத்துமீறி ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் தலைவர் விஜய் ஏற்கெனவே பலமுறை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளில் உள்ள மாநகராட்சி நூலகங்கள் மற்றும் அரசு அறிவுசார் மையங்களில், தவெக நிர்வாகியான விக்னேஷ்குமார் என்பவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிகிறது.
தலைமையின் வழிகாட்டுதலையும் விஜயின் எச்சரிக்கையையும் மீறிச் செயல்பட்டதால், சம்பந்தப்பட்ட நிர்வாகி விக்னேஷ்குமார் மீது தமிழக வெற்றிக் கழக தலைமை விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
