”தவெக அரசு ரூ.1.22 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது” - தங்கம் தென்னரசு
தமிழகத்தின் கடன் சுமை மற்றும் தவெக அரசின் நிதியறிக்கை தொடர்பாக முன்னாள் நிதியமைச்சரும், திமுக மூத்த தலைவருமான தங்கம் தென்னரசு காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மாநில அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டபோது, திமுக ஆட்சிதான் அனைத்துக் கடன் சுமைக்கும் காரணம் என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தைத் தற்போதைய நிதியமைச்சர் உருவாக்க முயன்றதாகக் குற்றம் சாட்டினார்.

தவெக அரசு தனது 5 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் போது, தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயரும் என தான் ஏற்கனவே எச்சரித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
இந்த நடப்பு நிதியாண்டிலேயே தவெக அரசு ரூ.1.22 லட்சம் கோடி நிகரக் கடனாகப் பெற உள்ளதாகத் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டினார். கடன் வாங்குவதைக் குறைப்பதாகக் கூறிவிட்டு, தொடர்ந்து அதிக அளவிலான கடன்களைப் பெற்று வருவது அரசின் நிதி மேலாண்மையின் தோல்வியையே காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
