"இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் தவெக-வின் வெற்றியே தொடரும்" - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

 
செங்கோட்டையன்

தற்போதைய இடைத்தேர்தல் முடிவுகளின் போக்கு குறித்து திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தவெகவின் ஆட்சி மற்றும் மக்கள் செல்வாக்கு குறித்து அதிரடியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளையும் தற்போது அதிமுக இழந்துவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக அரசின் கடந்த நான்கு மாத கால சீரிய நிர்வாகத்தின் மூலமாகவே இந்த இடைத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி கிடைத்துள்ளதாகவும், இது மக்கள் தவெக அரசுக்கு வழங்கியுள்ள தெளிவான அங்கீகாரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் இனி எந்தத் தேர்தல் வந்தாலும் தமிழக வெற்றிக் கழகம்தான் வெற்றி பெறும் என்று குறிப்பிட்ட அவர், இந்த வெற்றி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்றார்.

"அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவிற்கு வருவார்களா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்" என்று அவர் சுவாரஸ்யமான கருத்தைத் தெரிவித்தார்.

தமிழக மக்களுக்குச் சிறந்த ஆட்சியை வழங்குவதும், இந்தியாவில் ஒரு வலிமையான அரசியல் மாற்றத்தை உருவாக்குவதும்தான் தலைவரின் இலக்கு; அதற்கான மக்கள் தீர்ப்பே தற்போது வெளிப்பட்டுள்ளது என்றும் செங்கோட்டையன் பெருமிதத்துடன் கூறினார்.