தவறுதலாக அவுட் கொடுத்த நடுவர்... விரக்தியில் ஹெல்மெட்டை சிக்சருக்கு தூக்கியடித்த கிரிக்கெட் வீரர்!
Max60 Caribbean 2024 (Max60 Caribbean 2024) கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் ஜார்ஜ் முன்சி தலைமையிலான கரீபியன் டைகர்ஸ் அணி நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி பட்டத்தை வென்றது. மறுபுறம், அதன் தகுதிச் சுற்றுகள் நடந்தன. ஆகஸ்ட் 25 அன்று நடந்த ஒரு போட்டியில், நடுவரின் தவறான தீர்ப்பால் வெளியேற்றப்பட்டதில் விரக்தியடைந்த கார்லோஸ் பிராத்வைட், தனது ஹெல்மெட்டைக் கழற்றி, அதைத் தன் மற்றொரு கையில் பிடித்துக் கொண்டு, தான் வைத்திருந்த மட்டையால் அடித்து வீசினார். அது எல்லையில் விழுந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Remember the name.. Carlos Brathwaite.. 😄pic.twitter.com/uTr7DNl0Bv
— Nibraz Ramzan (@nibraz88cricket) August 25, 2024
திசர பெரேரா தலைமையிலான நியூயோர்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கும், சிக்கந்தர் ராசா தலைமையிலான கிராண்ட் கேமன் ஜாகுவார்ஸ் அணிக்கும் இடையே அன்றைய ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது நியூயோர்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக வந்த கார்லோஸ் பிராத்வைட் 5 பந்துகளில் 7 ரன்களை பெற்று ஆட்டமிழந்தார். ஜோசுவா லிட்டில் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பிராத்வைட் வெளியேறினார். ஆனால் கார்லோஸ் பிராத்வைட் அவுட்டாக, பந்து அவரது தோள்பட்டையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் அதை கவனிக்காத போட்டி நடுவர் கைகளை உயர்த்தி அவுட் கொடுத்தார்.
இதனால் கோபமடைந்த பிராத்வைட் நடுவர் மீதான கோபத்தில் பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தார். கோபத்தில் பெவிலியன் நோக்கி நடந்து கொண்டிருந்த பிராத்வைட், திடீரென ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு, கையில் இருந்த பேட்டால் ஆக்ரோஷமாக அடித்தார். இதனால் ஹெல்மெட் எல்லைக் கோட்டைத் தாண்டி கீழே விழுந்தது. பின்னர் கையில் இருந்த பேட்டை தூக்கி எறிந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா