போர் வெறியில் அமெரிக்கா.. இதுவரை உலகப் போர்களுக்கு செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?!ஈரானுடனான மோதலால் காலியாகும் கஜானா!
வல்லரசு நாடான அமெரிக்கா, தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டப் பல்வேறு போர்களில் பல லட்சம் கோடி டாலர்களை வாரி இறைத்து வருகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை நடந்த போர்களில் அதிக செலவு பிடித்தது இரண்டாம் உலகப் போர் தான். தற்போதைய மதிப்பீட்டின்படி, இந்தப் போருக்காக அமெரிக்கா மட்டும் சுமார் $4.7 டிரில்லியன் (சுமார் ₹390 லட்சம் கோடி) செலவிட்டுள்ளது.

முக்கியப் போர்களும் அமெரிக்காவின் செலவுகளும்:
அமெரிக்காவின் கஜானாவைக் காலி செய்த முக்கியப் போர்களின் பட்டியலைப் பார்த்தால் தலை சுற்றுகிறது. தற்போதைய பண மதிப்பின்படி இதுவரை போர் வெறியில் அமெரிக்கா செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா?
| போர் | கால அளவு | மதிப்பீடு (டாலரில்) |
| இரண்டாம் உலகப் போர் | 1941 - 1945 | $4.7 டிரில்லியன் |
| ஈராக் & ஆப்கானிஸ்தான் | 2001 - 2021 | $8.0 டிரில்லியன் (பராமரிப்பு உட்பட) |
| வியட்நாம் போர் | 1965 - 1975 | $844 பில்லியன் |
| முதலாம் உலகப் போர் | 1917 - 1918 | $382 பில்லியன் |
| கொரியப் போர் | 1950 - 1953 | $341 பில்லியன் |
தற்போது (ஏப்ரல் 2026) ஈரானுடனான ராணுவ மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதற்காக அமெரிக்கா நாள் ஒன்றுக்கு சுமார் $2 பில்லியன் (சுமார் ₹16,600 கோடி) வரை செலவு செய்து வருவதாக ஐநா சபையின் மனிதாபிமான முகமைத் தலைவர் டாம் பிளெட்சர் கவலை தெரிவித்துள்ளார்.

இது முன்னதாகக் கூறப்பட்ட ஒரு பில்லியன் டாலரை விட இருமடங்கு அதிகமாகும்.போருக்காகச் செலவிடப்படும் இந்தத் தொகையை உலகளாவிய வறுமை ஒழிப்பிற்கும், சுமார் 8.7 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றவும் பயன்படுத்தியிருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'ஆப்பரேஷன் எபிக் பியூரி' போன்ற ராணுவ நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட் முதல் முறையாக $1 டிரில்லியன் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது.
