தொடர் விடுமுறை முடிந்தது... சென்னை நோக்கி குவிந்த வாகனங்களால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு!
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை துவங்கிய நிலையில், ஆகஸ்ட் 18ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் சொந்த ஊர் நோக்கி படையெடுத்தனர்.
இந்நிலையில், விடுமுறை முடிந்து நேற்று மாலை முதல் தென் தமிழகம் நோக்கி சென்ற வாகனங்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருவதால் பரனூர், ஆத்தூர், மதுரை, திருச்சி போன்ற பகுதிகளில் நேற்று இரவு முதல் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஸ்ம்பித்து நின்றன.

சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களுக்கு சொந்த ஊர் சென்று விட்டு, இன்று திங்கட்கிழமை பணி நாள் என்பதால் பலரும் ஒரே நேரத்தில் நேற்று மாலை முதல் சென்னையை நோக்கி தங்கள் வாகனங்களில் திரும்பத் துவங்கினர்.
சென்னையை நோக்கி அதிகளவிலான வாகனங்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
