பலியான மாணவரையே குற்றவாளியாக்கிய கொடூரம்... தவெக அரசை விமர்சித்து கனிமொழி அறிக்கை!

 
கனிமொழி கனிமொழிவிஜய் விஜய்கனிமொழி

கோவையில் போதைப்பொருள் விற்பனை குறித்துக் புகார் தெரிவித்த கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் மீது மட்டுமின்றிப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய காவல்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

கல்லூரியில் போதைப்பொருள் விற்பனை குறித்துத் தகவல் தெரிவித்ததற்காகவே மாணவர் அமுதன் போதைப்பழக்கத்தில் ஈடுபட்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதனை ஏதோ மாணவர்களுக்கு இடையேயான சாதா கோஷ்டி மோதல் என்று கூறி வழக்கைத் திசைதிருப்பத் தமிழக அரசு முயல்கிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

அமுதன்

போதைப்பொருள் குறித்துத் தகவல் தெரிவித்த பிறகும் அம்மாணவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் தவறிவிட்டன என மாணவரின் பெற்றோரே புகார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த அப்பாவி மாணவரையே குற்றவாளியாக்கி இந்தச் சம்பவத்தில் உள்ள உண்மைகளை மூடி மறைக்க அரசு பார்க்கிறதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாணவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமுதன்

கல்லூரி மாணவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவர்களின் போராட்டமும் அரசியல் தலைவர்களின் கண்டனங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மாநிலத்தில் நடைபெற்று வரும் முக்கிய அரசியல் நிகழ்வுகள் மற்றும் கோவை சம்பவத்தின் தொடர் செய்திகளைத் தெரிந்துகொள்ள Tamil Nadu News Update வீடியோவைப் பார்க்கவும். இந்த வீடியோ தற்போதைய அரசியல் சூழல் மற்றும் முக்கிய செய்திகளைத் தெளிவாக விளக்குகிறது.