பகீர் வீடியோ.. கார் இன்ஜினில் பதுங்கி இருந்த 6அடி மலைப்பாம்பு.. பதறிய கார் ஓனர்..!!

 
காரில் மலைப்பாம்பு
கார் இன்ஜினில் 6 அடி நீள மலை பாம்பு மறைந்திருந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு டெல்லியிலுள்ள சித்தரஞ்சன் பார்க் பகுதியில் வசித்து வரும் நபர், வழக்கம் போல தனது காரை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, காரின் உள்ளே 6 அடி நீள மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே அவர் டெல்லியைச் சேர்ந்த வன உயிர் மீட்பு நிறுவனத்திற்கு போன் செய்துள்ளார். 


உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர், யாருக்கும் எந்த சேதாரமும் இன்றி பத்திரமாக பாம்பை மீட்டனர். இந்த மீட்பு நடவடிக்கைகள் முழுவதையும் படம் பிடித்த Wildlife SOS குழுவினர், அதை தங்கள் நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில், குறிப்பாக X தளத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

6 அடி நீள மலைப்பாம்பு

6 அடி நீளம் கொண்ட இந்த மலைப்பம்பு எப்படி காரின் இஞ்சின் பகுதிக்குள் சென்றது என தெரியவில்லை. பாம்பு பிடிப்பதில் திறமையான இக்குழுவினர் அரை மணி நேரம் கடுமையான முயற்சிக்குப் பிறகு வெற்றிகரமாக பாம்பை பிடித்தனர்.  இந்த மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 

From around the web