பகீர் வீடியோ... 13வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை... பதறியடித்து கணநேரத்தில் காப்பாற்றிய நபர்!

 
13வது மாடி குழந்தை

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் டும்புவாலி பகுதியில்  அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில்  13 வது மாடியில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உள்ளது.   இந்த குழந்தை கடந்த வாரம் 13வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தது.


சரியாக அதே சமயத்தில் அந்த வீதி வழியாக  வேஷ் ஹெத்ரா என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் குழந்தை மாடியில் இருந்து கீழே விழுவதை பார்த்த நிலையில் உடனடியாக தன்னுடைய இரு கைகளாலும் குழந்தையை தாங்கிப் பிடித்துக் கொண்டார்.

குழந்தை

குழந்தை முதலில் அவருடைய கையில் விழுந்து பின்னர் கீழே விழுந்தது. இதனால் குழந்தைக்கு லேசான காயங்களே  ஏற்பட்டது. இந்நிலையில் குழந்தையை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில் அந்த நபருக்கு பலரும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web