அதிர்ச்சி வீடியோ... சரக்கு கப்பல் மோதி நொறுங்கி விழுந்த பாலம்... வாகனங்களோடு கடலுக்குள் விழுந்து தத்தளித்த பொதுமக்கள்!
அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்டிமோர் துறைமுகத்தை கடக்க முயன்ற பெரிய சரக்கு கப்பல் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாலம் சில நிமிடங்களில் இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
Here is the full video of the DALI Cargo Ship that hit the Port of Baltimore , MD Francise Key Bridge #Baltimorebridge pic.twitter.com/m7z2lzDmd5
— Penelope (@PENELOPENICIA) March 26, 2024
2.6 கிமீ நீளமுள்ள பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் இடிந்து விழுந்ததில் பாலத்தில் இருந்த சுமார் 20 பேர், அதில் இருந்த 7 தொழிலாளர்கள் மற்றும் 5க்கும் மேற்பட்ட கார்கள் ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தை அடுத்து பாலத்தின் இருபுறமும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், அனைத்து பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் பாலத்தின் மீது பயணித்த கார், பைக் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கியதால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 1977 இல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 மில்லியன் வாகனங்கள் இதை கடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!