வீடியோ வெளியானது... அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் படுகொலை - தப்பியோடிய அண்ணன்!
Sep 4, 2026, 15:26 IST
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே சொத்துத் தகராறு காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் இளைய மகன் ராஜராஜனை, சொத்துத் தகராறு காரணமாக அவரது சொந்த அண்ணனான ராஜபாண்டி படுகொலை செய்துள்ளார்.

ராஜராஜனை அவரது சகோதரர் ராஜபாண்டி விரட்டிச் சென்று கொலை செய்ததுடன், கொலை செய்த பிறகு எந்தவிதப் பதற்றமும் இன்றி மிக சாவகாசமாக நடந்து வீட்டிற்குச் செல்வதும், பின்னர் அதே வழியில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதும் அருகிலுள்ள சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தத் காட்சிகள் தற்போது வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
