பகீர் வீடியோ.. முஸ்லிம் பெண்ணுடன் வந்த இந்து வாலிபர்.. ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல்!

 
இளைஞர் மீது தாக்குதல்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மசுலிப்பட்டினம்-கோல்கொண்டா கோட்டை சந்திப்பு சாலையின் மையத்தில் சார்மினார் கட்டிடம் அமைந்துள்ளது. கலை நயத்துடன் வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் மூசி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தற்போது மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.


இந்நிலையில் சார்மினார் அருகே மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வந்த வாலிபரை குறிவைத்து கும்பல் ஒன்று தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோவில், ஒரு இளைஞன் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் பர்தா அணிந்தபடி வருகிறான். அப்போது அந்த பகுதியில் இருந்த மர்ம கும்பல் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி யார் என்று விசாரணை நடத்தினர்.

கைக்குழந்தையை தோளில் சுமந்தபடி இருக்கும் குழந்தையின் தந்தை எங்கிருந்து வந்தவர் என்பது குறித்தும் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவரிடம் இருந்த அடையாள அட்டை மூலம் அந்த வாலிபர் இந்து என தெரியவந்துள்ளது. அதன் பிறகு அந்த கும்பல் அந்த வாலிபரை சுற்றி வளைத்து தாக்குகிறது. இதை அவரது முஸ்லிம் மனைவி தடுக்கிறார். கணவர்களை தாக்கியவர்களிடம் பதற்றமாக பெண் கெஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இருப்பவர் பி.ராகுல் என்பது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து சார்மினார் போலீசில் புகார் அளித்துள்ளார். சார்மினார் அருகே நடந்த இந்த சம்பவம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் வரும் இந்த நகரத்தின் இமேஜை சேதப்படுத்தியுள்ளது என்று ராகுல் கூறினார்.

அவரது புகாரின் பேரில் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சார்மினார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web