வைரலாகும் வீடியோ... தாராபுரத்தில் தவெக தொண்டர் போட வந்த துண்டைத் தட்டிவிட்ட முதல்வர் விஜய்!

 
விஜய் தாராபுரம் துண்டு

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் விஜய், பொதுமக்களைச் சந்திப்பதற்காக வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்றபோது, தவெக தொண்டர் ஒருவர் அணிவிக்க முயன்ற சால்வையைப் பிடித்துத் தட்டிவிட்ட நிகழ்வு தற்போது கவனம் பெற்றுள்ளது.

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வழியில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக அவர் வாகனத்திலிருந்து இறங்கிச் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது கூட்டத்தில் இருந்த தவெக தொண்டர் ஒருவர் அவசரமாய் அருகில் வந்து முதல்வர் விஜய்க்குச் சால்வை அணிவிக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக நடந்த இந்தச் செயலால் கோபமடைந்த முதல்வர் விஜய், அந்தச் சால்வையைப் பிடித்துத் தட்டிவிட்டு அங்கிருந்து உடனடியாக வேகமாக நடந்து சென்றார்.

முதல்வர் விஜய்க்கு அருகில் திடீரெனத் தொண்டர் நெருங்கியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப் படையினரும் காவல்துறையினரும் உடனடியாகத் தலையிட்டு அந்தத் தொண்டரை அங்கிருந்து விலக்கி அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.