பகீர் வீடியோ... ஏவுகணை தாக்குதல்.. டிவி நேரலையில் பேசிக் கொண்டிருந்த செய்தியாளர் தூக்கி வீசப்பட்ட துயரம்!
இஸ்ரேல் - லெபனான் போர் உலக நாடுகளை பதற்றமடைய செய்து வரும் நிலையில், லெபனானின் ஊடகவியலாளர் ஒருவர் தொலைக்காட்சி நேரலையில் பேசிக் கொண்டிருக்கும் போதே இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று அவரது வீட்டைத் தாக்கிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஜ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் கால்பந்து திடல் ஒன்றில் கடந்த ஆகஸ்டு தொடக்கத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதனால் இஸ்ரேல் கொந்தளித்தது. பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஜ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது.
இந்நிலையில், சில நாட்களாக லெபனான் நாட்டில் ஹிஜ்புல்லா அமைப்பின் நிலைகளை இலக்காக கொண்டு இஸ்ரேல் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இன்று வரை லெபனானில் பலியானோர் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் 50 பேர் குழந்தைகள் ஆவர். 1,835 பேர் காயமடைந்து உள்ளனர் என லெபனான் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில், மிராயா இன்டர்நேஷனல் நெட்வொர்க்கின் தலைமை ஆசிரியர் ஃபாடி பௌதயா, ஏவுகணை அவரது வீட்டைத் தாக்கிய நேரம், சமநிலையை இழந்த ஊடகவியலாளர் தூக்கி வீசப்பட்டார். நேரலையில், அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
வீடியோவின் படி, நேரலையில் பௌதயா பேசிக் கொண்டிருந்த போது அவரது வீட்டை ஏவுகணை ஒன்று தாக்கியது. திடீர் தாக்குதலை அடுத்து அலறிய பௌதயா வீடியோவை துண்டித்ததாக தெரிகிறது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. நேரலையில், இருக்கும் போது தாக்குதலில் சிக்கிய செய்தியாளருக்கு என்ன ஆனது என எக்ஸ் தளத்தில் பலரும் கேள்விகள் மற்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். தாக்குதலுக்கு பின் சிறிது நேரம் கழித்து ஆன்லைன் வந்த பௌதயா ஃபாளோயர்களுக்கு பதில் அளித்தார்.
அதில், “தொலைபேசியில் அழைத்தவர்கள், குறுஞ்செய்தி அனுப்பியவர்கள், செக்-இன் செய்தவர்கள் மற்றும் ஏதோ உணர்ச்சியை உணர்ந்த அனைவருக்கும் நன்றி. கடவுளுக்கு நன்றி, நான் நலமாக இருக்கிறேன், கடவுள் மற்றும் அவர் எங்களுக்கு அளித்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி. எதிர்ப்புக்கு ஆதரவாக எங்கள் ஊடக கடமையைத் தொடர நாங்கள் திரும்புகிறோம், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!