பகீர் வீடியோ.. பள்ளத்தில் சறுக்கிய பேருந்து.. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்..!

 
கேரளாவில் பேருந்து விபத்து
கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து பள்ளத்தில் விழாமல் இருக்க ஓட்டுநர் சாமர்த்தியமாக செய்த செயலால் பயணிகளின் உயிர் காப்பற்றப்பட்டது.

கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் பாலக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள பிரதான சாலையில் தனியார் பேருந்து இருபதுக்கு மேற்பட்ட பயணிகளுடன் சாலையில் வேகமாக சென்றது.


அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் அரசுவேகத்தில் மோதி அருகில் உள்ள பள்ளத்தில் விழாமல் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்தை மீண்டும் சாலைக்கு கொண்டு வந்தார்.இதையடுத்து சாலையில் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார்.

உயிர் பிழைத்தால் போது என்று பயணிகள் அனைவரும் உடனடியாக பேருந்தில் இருந்து இறங்கினர். இந்த விபத்து தொடர்பான சிசிடி காட்சி வெளியான நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web