தீக்குழம்பை கக்கியபடி வெடித்த எரிமலை.. திகிலுட்டும் வீடியோ !!

உலகிலேயே இயற்கை பேரிடரால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் முதன்மையாக உள்ளது இந்தோனேசியா. பல தீவுகளை கொண்ட இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி, எரிமலை தாக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றனர்.
இந்தோனேசியா தீவில் மட்டும் சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை எப்போதும் வெடிக்கலாம் என்ற நிலையில் தான் உள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தோனேசியாவில் செயலில் உள்ள எரிமலைகளில் மெராபி மலைப்பகுதியில் உள்ள எரிமலை ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.
1/3
— Volcaholic (@CarolynnePries1) March 11, 2023
Woahhh!
Today: Massive eruption at Merapi #volcano, #Java, #Indonesia. Pyroclastic flow of hot rock fragments, volcanic gases, and air descended on southeastern flank. Reached 7km from summit, close to populated areas. No reported casualties yet. #Merapi pic.twitter.com/sXM7vZmRZO
ஜாவா தீவில் அதிக மக்கள் வசிக்கக் கூடிய மெராபி பகுதியில் உள்ள இந்த எரிமலை சில நாட்களாக லேசாக குமுறிய எரிமலை திடீரென வெடித்து சாம்பல் புகையை வெளியேற்றியது. 300 அடி உயரத்திற்கு மேக கூட்டம் போல புகை மண்டலம் தேங்கி நிற்கிறது. மலைப்பகுதியில் 7 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எரிமலைச் சாம்பல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்றியுள்ள மலை கிராமங்களை சாம்பல் தூசுகள் மூடியுள்ளதால், அங்கு இருப்பவர்களை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற ஜாவா தீவில், மெராபி மலைக்கு அருகில் உள்ள மற்றொரு மலையில் இருந்து எரிமலை வெடிப்பதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். எனினும் ஆபத்தானவை என்று அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
Indonesia's Mount Merapi, one of the world's most active volcanoes, has erupted, spewing out smoke and ash that blanketed villages near the crater https://t.co/FBWiuXGpCL pic.twitter.com/OIzGlHESXM
— AFP News Agency (@AFP) March 11, 2023