காஞ்சிபுரம் : அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் மலத்தை கொட்டிய கொடூரம்!

 
திருவந்தார்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மனித மலத்தை கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே திருவந்தார் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க மாணவர்கள் சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து இதுக்குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காஞ்சிபுரம் அருகே வேங்கை வயல் போல சம்பவம்… அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில்  மலம் கலந்ததாக புகார் ; காவல்துறையினர் விசாரணை!! - Update News 360
இதனையடுத்து பள்ளிக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் குடிநீர் தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற உத்தரவிட்டனர். குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யவும் வருவாய் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அப்போது தண்ணீரில் மனித மலத்தை கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் பள்ளி வளாகத்தில் உள்ள மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் திருவந்தார் கிராம மக்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைப்போல் கடந்த செப்டம்பர் மாதம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனை குளம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தலைமை ஆசிரியர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற பாப்பாரப்பட்டி போலீசார் மற்றும் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் துளசிராமன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். தண்ணீரை சுத்தம் செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு சத்துணவு தயார் செய்யும் சமையற்கூட சுவற்றில் மனித மலத்தை கொட்டி வைத்திருந்தனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்துள்ளனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை வேங்கைவயலில் தண்ணீர் தேக்க தொட்டியில் மலத்தை கலந்த சம்பவம் பெரும் பேசும்பொருளானது. இந்த சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆன நிலையில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

 

From around the web