மைனஸ் 25 டிகிரி செல்சியஸில் நடந்த திருமணம்! வைரல் வீடியோ!

 
திருமணம்

இமாசலப் பிரதேசத்தின் கடும் குளிர் நிறைந்த பள்ளத்தாக்கில் குஜராத்தை சேர்ந்த காதலர்கள் இருவர் திருமணம் செய்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இமாசலப் பிரதேச மாநிலத்தின் கடும் குளிர் நிறைந்த பள்ளத்தாக்கில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த காதலர்கள் இருவர் திருமணம் செய்து கொண்டனர். மைனஸ் 25 டிகிரி செல்சியஸ் குளிரிலும் அலங்கார மேடை அமைத்து இந்து முறைப்படி காதலர்கள் திருமணம் செய்துகொண்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.



இமாசலப் பிரதேசத்தின் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அஜய் பன்யால், கடும் குளிரில் நடைபெற்ற திருமணத்தின் விடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இதுபோன்றும் திருமணம் நடைபெறும். காதலர்களின் ஆசை நிறைவேறிய தருணம். காதலியின் விடாமுயற்சியால், குஜராத்தைச் சேர்ந்த காதலர்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் மைனஸ் 25 டிகிரி வெப்பநிலையிலும் திருமணம் செய்துகொண்டனர்.

...

இங்கு இதுபோன்று திருமணம்  நடப்பது இதுவே முதல்முறை. ஸ்பிட்டி மாவட்டத்தின் மூராங் பகுதியில் நேற்று காலை இந்த அற்புதமான திருமணம் நடைபெற்றது. நெடுந்தூரம் பணித்து தனித்துவமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமாக ஸ்பிட்டி மாறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவிற்கு பயனர் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், ‘எனது கனவு ஸ்பிட்டியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று எழுதினார். மற்றொரு பயனர், ‘அவர்கள் மலைகளின் இயற்கை அழகை அழிக்கிறார்கள். ரீல்களுக்காக தேவையற்ற அவசரம் மற்றும் மாசுபாடு.’ என்று குறிப்பிட்டுள்ளார். மூன்றாவது பயனர், ‘சகோதரி சுவிட்சர்லாந்து திருமணத்தை இந்தியாவில் மீண்டும் உருவாக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

From around the web