வாழ மறுத்த மனைவி.. மாமியார் வீட்டிற்கே சென்று வெட்டி கொலை.. கணவன் வெறிச்செயல்!

 
முபாரக்

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள அனேகல் தாலுகா ஜிகானி நகரை சேர்ந்தவர் முபாரக் (28). இவரது மனைவி அர்பியா தாஜ் (24). இந்நிலையில் அர்பியா தாஜ் ஒரு மாதத்திற்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஒரு வாரத்தில் தாய் வீட்டிற்கு செல்வதாக மனைவி கூறிவிட்டு ஒரு மாதமாகியும் வீடு திரும்பாததால் முபாரக் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அர்பியா தாஜ், கதவைப் பூட்டிவிட்டு, உங்களுடன் வீட்டிற்கு வரமாட்டேன் என்று முபாரக்கிடம் கூறினார். பலமுறை அழைத்தும் கதவை திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முபாரக் கோடாரியால் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். தன்னுடன் வாழ மறுத்த மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அர்பியாவின் தாய் ஓடி வந்தார். அப்போது முபாரக் கதவை பூட்டிவிட்டு கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.  இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜிகானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அர்பியா தாஜ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகில் முபாரக் ஆபத்தான நிலையில் கிடந்தார்.

கொலை

உடனே போலீசார் அவரை மீட்டு ஜிகானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அர்பியா தாஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அனேகல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web